×

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி-ஆட்சியர் தலைமையில் நடந்தது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள 348 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு கருவிகள் முதல் வரிசை முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிந்து 550 கட்டுப்பாட்டு கருவிகள், 1,150 வாக்குப்பதிவு கருவிகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றில் பயிற்சிக்காக 15 கட்டுப்பாட்டு கருவிகளும், 15 வாக்குப்பதிவு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது போக, மீதமுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இன்று) நேற்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 348 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 421 கட்டுப்பாட்டு கருவிகள், 421 வாக்குப்பதிவு கருவிகள் யாவும், முதல் வரிசை முறையில் ஒதுக்கீடு பணியானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, திமுக நகர செயலாளர் சக்கரை, அதிமுக நகர துணை செயலாளர் செந்தில், பிஜேபி சுகுமார், தேமுதிக மணிகண்டன், காங்கிரஸ் செல்வராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி-ஆட்சியர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Villupuram District ,Adhikari ,Villupuram ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர்...